வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.65 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பூங்காவை பயன்படுத்தினர். தற்போது பூங்கா செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. மக்கள் நடைபயிற்சிக்கும், விளையாட்டுப் பயிற்சிக்கும் இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனே சிறுவர் பூங்காவை காலையிலும் மாலையிலும் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.