சென்னை தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள பூங்காவின் சுற்று சுவர் இடிந்து கீழே விழுந்து 5 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை சுற்றுச்சுவர் கட்டப்படவே இல்லை. மேலும் சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் தேவையற்ற பல சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. எனவே சுற்று சுவரை கட்டி பூங்காவை மீண்டும் புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.