மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி திருவேங்கடம் பிள்ளை பூங்கா, காந்தி பூங்கா, முருகன் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் பொழுதுபோக்கிற்கு இடமில்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சீர்காழி நகராட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள்,சீர்காழி