தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தில் உள்ள சிமெண்டுகாரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், கட்டிடத்தில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டிகிடக்கிறது இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?