கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பூங்காவில் முட்செடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளின் சாக்கடை கழிவுநீரும் பூங்கா பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பூங்கா விஷ ஜந்துக்கள் வாழும் இடமாகவும் மாறிவிட்டது. எனவே பூங்காவில் உள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை வெட்டி அகற்றி பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.