சென்னை ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் உள்ள பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்கா முழுவதும் குப்பைகள் சூழ்ந்தும், விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்தும் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு விளையாடுவதற்கு இந்த பூங்காவை தவிர வேறு எந்த திடலும் அருகில் இல்லை. மேலும் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்கும் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நலன் கருதி பூங்காவை திறக்க வேண்டும்.