சென்னை ராகவ ரெட்டி காலனி குமரன் நகர் போலீஸ் நிலை–யம் அருகே சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கூர்மையாகவும் காட்சியளிக்கிறது. குழந்தைகள் விளையாடும் பூங்காவில் கூர்மையான உபகரணங்கள் இருப்பது பெற்றோர்களை அச்சம் அடைய வைக்கிறது. மாநகராட்சி கவனித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- விவேக் பாலாஜி.