திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் ஏறி கல்வி, வேலை, வியாபாரம் என சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் மழை, வெயில் காலங்களில் பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை வசதி இல்லை. அங்கு சுகாதார வளாகம் கட்ட ஏற்பாடுகள் நடந்தது. அந்தப் பணிகளை இன்னும் தொடங்காமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திம்மாம்பேட்டையில் பயணிகள் நிழற்குடை வசதி, சுகாதார வளாகம், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-சி.சந்தோஷ், சமூக ஆர்வலர், திம்மாம்பேட்டை.