திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் கடைசி லிங்கமாக ஈசானிய லிங்கம் உள்ளது. இந்தக் கோவிலின் அருகே ஈசானிய மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் வழியாகத்தான் தினமும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். ஈசானிய மைதானத்தில் இரவில் ஏராளமானோர் திருவண்ணாமலை மட்டுமின்றி பல்வேறு பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் வந்து மது அருந்திவிட்டு செல்கின்றனர். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அவ்வழியாக செல்ல சில சமயங்களில் அச்சப்படுகின்றனர். மேலும் புனிதமாக கருதப்படும் கிரிவலப் பாதையில் இவ்வாறு நடப்பது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
லிங்கம், திருவண்ணாமலை.