மதுபிரியர்கள் அட்டகாசம்

Update: 2026-01-18 18:06 GMT
வடலூர் ரெயில்வே கேட் அருகில் சாலையோரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு மதுஅருந்தும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பாட்டில்களை குடித்துவிட்டு சாலையில் உடைப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மதுப்பிரியர்களால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்