அண்ணாமலை நகர் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனர்.