வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள காஞ்சீபுரம்-வந்தவாசி மெயின்ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் ஆடு, கோழி இறைச்சி கடைகள் உள்ளன. அந்தக் கடையில் இருந்து வீசப்படும் எலும்புத்துண்டுகள், கழிவுகளை சாப்பிட நாய்கள் குறுக்கே ஓடுகின்றன. அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
-கீர்த்திவாசன், தூசி.