வாணியம்பாடி புதூர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் பகுதி குறுகலாக உள்ளது. இதனால் இதன் மீது வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகுள்ளாகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பாலத்தின் மீது இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே மேம்பாலத்தில் விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுகவனம், வாணியம்பாடி.