காஞ்சீபுரம் மாவட்டம் பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள மதுராந்தோட்டம் தெருவில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், பொது மக்களை துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.