கருமத்தம்பட்டி அருகே கணியூரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை இருக்கிறது. ஆனால் அது மிகவும் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் அந்த நிழற்குடைக்குள் செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் அவர்கள் மழை, வெயிலில் திறந்தவெளியில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த நிழற்குடையை உடனடியாக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.