ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.