புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

Update: 2026-02-01 11:11 GMT

கரூர் மாவட்டம் புகழூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. எனவே இந்த கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பாதுகாப்பான முறையில் புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்