கோவை காந்தி பூங்காவுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் பூங்காவிற்குள் தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் உலா வருகின்றன. அவை சில நேரங்களில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோரை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் நடைபயிற்சிக்கு வந்து செல்லும் முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.