தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல் பொதுமக்களை அவதியுறச்செய்யும். அரியலூர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், குழந்தைகளும் அதிகம் அவதியடைந்து வருகின்றனர். கொசுக்களால் சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கொசுக்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.