கோவை தலைமை தபால் நிலையத்துக்கு தபால் சேவை, சேமிப்பு கணக்கு தொடர்பாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் தபால் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அங்கு வந்து செல்வோரை அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் நாய்க்கடிக்கு ஆளாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும்.