சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகரித்து இருப்பதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் அண்ணாமலைநகர் பகுதிகளில் கொசு மருந்து அடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.