கால்நடை சிகிச்சை மையம் தொடங்குவார்களா?

Update: 2022-08-08 11:25 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் எர்த்தாங்கல் ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் கால்நடை வளர்ப்புத்தொழிலாளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கால்நடைகளுக்கு நோய்வாய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் அல்லது பேரணாம்பட்டு நகரங்களுக்கு ஓட்டிச்செல்ல வேண்டும். உடல்நலம் பாதித்த கால்நடைகளை 10 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வும் எர்த்தாங்கல் ஊராட்சியில் கால்நடை சிகிச்சை மையம் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு

மேலும் செய்திகள்