செங்கம் பகுதியில் ஊர் பெயர்கள், கிலோ மீட்டர் தூரம் ஆகியவற்றை எழுதி வைக்கப்படும் வழிகாட்டி பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் கட்டப்படுகின்றன. தனியார் நிறுவனங்களின் விளம்பர நோட்டீசுகளும் வழிகாட்டி பலகைகள் மீது ஒட்டப்படுகின்றன. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழி தெரியாமல் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவச்சந்திரன், செங்கம்.