நெமிலி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்வேறு விஷயமாக வெளியூர் செல்கிறார்கள். பஸ்சுக்காக காத்திருப்போருக்கு போதிய இருக்கை வசதி இல்லை. அங்குள்ள இருக்கைகள் பழுதாகி உள்ளன. பயணிகள், பொதுமக்களின் நலன் கருதி தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் கவனிப்பார்களா?
மு.இளங்கோவன், ஆலப்பாக்கம்