சோளிங்கர் 2-வது வார்டில் நகராட்சி இறைச்சிக்கடை வளாகம் உள்ளது. அதில் 30 கடைகள் உள்ளன. மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் உள்ளே கசிகிறது. பெரும்பாலான கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. ஆனால் கடை வாடகையை மட்டும் முன்கூட்டியே வசூலித்து விட்டனர். நகராட்சி இறைச்சிக்கடைகளில் போதிய வசதியை ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-மு.ஜெகதீசன், சோளிங்கர்.