ஆற்காடு பஸ் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகக் கடைகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இந்தநிலையில் கடைகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில், இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை திறப்பார்களா?
-சலீம், ஆற்காடு.