வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. மேலும் தபால் நிலையம், வங்கி உள்ளிட்டவைகளும் உள்ளன. இதனால் அங்கு பல்வேறு தேவைகளுக்கான தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் சில கேமராக்கள் உடைந்தும், தலைகீழாக தொங்கிக்கொண்டும் உள்ளது. கேமராக்களை அதிகாரிகள் சரி செய்வார்களா?
-மாதவன், வேலூர்.