திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் சேருகிறது. அந்தக் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. வரும் கோடையில் ஏரிகளை தூர்வாரி மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அருட்செல்வன், ஆலங்காயம்.