குட்டையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைப்பார்களா?

Update: 2022-09-01 12:27 GMT

வேலூரை அடுத்த ரங்காபுரம்-செங்கானத்தம் சாலை ஓரம் மூலக்கொல்லை என்ற இடத்தில் கைவிடப்பட்ட கற்கோரை குட்டையின் மீது பாசி படர்ந்து, செடி கொடிகள், கோரைகள் வளர்ந்துள்ளது. நீர் நிரம்பிய 40 அடி ஆழ கற்கோரை குட்டையில் யாரேனும் தவறி விழுந்தால் மீட்பது சிரமம். சாலையில் செல்வோர் யாரேனும் தவறி கற்கோரை குட்டையில் விழுந்தாலும் வெளியே யாருக்கும் தெரியாது. அபாயம் விளைவிக்கக்கூடிய கற்கோரை குட்டையைச் சுற்றிலும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வேலி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்குமா?

-ஆர்.குப்புராஜ்,வேலூர்.

மேலும் செய்திகள்