ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டணமில்லா கழிப்பறை நகராட்சி மூலம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்றுவரை பயன்பாட்டுக்கு விடவில்லை. வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வெளியூர்களில் இருந்து வரும்பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி கழிப்பறைக்கு செல்கின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட இலவச கழிப்பறையை நகராட்சி நிர்வாகம் பயன்பாடுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.