அரக்கோணம் அம்பரிஷிபுரம் ஜடேரி அருந்ததிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அங்குள்ள இருளர் இன குடியிருப்பு பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் நலன் கருதி, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
-முருகேசன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.