சோளிங்கர் ஒன்றியம் கொடைக்கல் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் 35 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதற்காக ரூ.1 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், கொடைக்கல்.