சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Update: 2022-08-28 13:20 GMT

திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.110 கோடியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்துக்கு பின்புறம் ஏற்கனவே வனத்துறையால் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடத்தில் நாகத் தகடுகளை வைத்து மறைத்துள்ளனர். கோடிக்கணக்கில் செலவு செய்த அரசு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

-எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.  

மேலும் செய்திகள்