திமிரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெயர் பலகையில் ராணிப்பேட்டை மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்படாமல் இன்று வரை வேலூர் மாவட்டம் என்றே தொடர்கிறது. ஆரம்ப சுகாதாரத்தின் பெயர் பலகையில் மட்டும் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படாமல் இருப்பது ஏன்? என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தாமோதரன், திமிரி.