விபத்து பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?

Update: 2024-12-29 17:33 GMT

சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கெட் பகுதியில் இருந்து ஆந்திரா எல்லை வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலையில் செங்குட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விநாயகர் கோவில் பகுதிகளில் பள்ளிகள், விடுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேற்கண்ட பகுதியில் சாலையை கடப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை வெள்ளைக் கோடுகள் அடித்து, பள்ளி பகுதி என எச்சரிக்கை பலகையை வைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.துரை, செங்குட்டை.

மேலும் செய்திகள்