பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளன. ஆனால் பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தாமல் உள்ளனர். அது, தற்போது பராமரிப்பின்றி உள்ளது. அங்கு தண்ணீர் வசதி இல்லை. சுகாதார வளாகத்தை சுற்றிலும் புதர் வளர்ந்துள்ளது. கோவில் நிர்வாகம் சுகாதார வளாகத்தை சீரமைத்து திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-ராஜகோபால், பள்ளிகொண்டா.