திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தளவாநாயக்கன்பேட்டையில் செய்யாற்றின் கரையோரம் மயானம் உள்ளது. அங்கு பிணங்களை எரிக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு தகனமேடை கட்டப்பட்டது. அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளனர். இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரிவாயு தகன மேடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-டி.புனிதன், செங்கம்.