காட்பாடி காந்தி நகரில் பாண்டியன் மதகு கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் மிகப்பெரிய கால்வாய் ஆகும். இந்தக் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. கடந்த சில ஆண்டுகள் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் கால்வாய் தூர்வாரப்பட்டு அதன் கழிவுகள் அருகிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாண்டியன் மதகு கால்வாயின் மேல் பெரிய ஸ்லாப்புகள் அமைத்து மூட வேண்டும். தொடர்ந்து மழை பெய்வதால் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பாண்டியன் மதகு கால்வாயின் மேல் சிலாப்புகள் போட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரங்கராஜன், காந்திநகர்.