வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை மீது உள்ள கோபுரத்தில் மூன்று பக்கங்களில் கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக பொருத்தப்பட்ட இந்த கடிகாரம் கடந்தசில மாதங்களாக ஓடாமல் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.