பாடப்புத்தகங்கள் வழங்கப்படுமா?

Update: 2025-10-12 18:42 GMT

வேலூர் சத்துவாச்சாரி பெரியதெருவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் வழியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்ததில் இருந்தே இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தற்போது காலாண்டு தேர்வு முடிந்து அரையாண்டு தேர்வும் வர உள்ளது. மாணவ-மாணவிகள் புத்தகம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-எம்.சரவணன், வேலூர். 

மேலும் செய்திகள்