தமிழக அரசு வேளாண்மை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலகத்துக்கு சென்று கேட்டால் தார்ப்பாய் இல்லை எனக் கூறுகிறார்கள். தமிழக அரசு விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடராஜன், சேனியநல்லூர்.