ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா மோசூர், அம்பரீஷ்புரம் கிராமங்களில் பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு மாற்றம் தொடர்பான மனுக்கள் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்டு பல மாதங்களாகப் பட்டா பெயர் மாற்றம் உட்பிரிவு மாற்றம் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தாசில்தார் ஆகியோருக்கு உரிய ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
குமார், மோசூர்