அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் ஸ்டேட் பேங்க் அருகில் அரசு பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ‘நம்ம டாய்லெட்’ கழிவறை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேேய உள்ளது. அங்கு செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே நம்ம டாய்லெட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ராஜ்குமார், அரக்கோணம்.