அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் ஸ்டேட் வங்கி அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நம்ம டாய்லெட் கழிப்பறை பல ஆண்டுகளாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே பாழடைந்து வருகிறது. நகராட்சியில் பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாகவே உள்ளனர். இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.