அரக்கோணம் தாலுகா மோசூர், அம்பரீசபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை வளர்க்கின்றனர். அந்தக் கிராமங்களில் மருந்தகம் இல்லை. தற்போதைய காலநிலையில் கோமாரி நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கால்நடை பராமரிப்பு துறையினர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் படி கேட்டுக்கொள்கிறோம்.
-ஜானகிராமன், மோசூர்.