ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2023-03-05 11:03 GMT

வாலாஜாவில் உள்ள பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பின்பக்கம் உள்ள ஏரியில் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்ைபகள் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி தினமும் கொட்டப்படுகிறது. அந்த வழியே வரும் நாய்கள், பன்றிகள் அந்த மூட்டைகளை சிதைத்து சாலைக்கு இழுத்துச் சென்று சாப்பிடுகின்றன. இதனால் இறைச்சி கழிவுகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. இதனால் அருகில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உடனடியாக ஏரி பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

-பாலசுந்தரம், வாலாஜா.

மேலும் செய்திகள்