திருப்பத்தூரில் நகர காவல் நிலையம் அருகே தனியார் பள்ளி நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்ேகற்க அமைச்சர் வருகை தர இருந்தார். ஆனால், அமைச்சர் வரவில்லை. எனினும், பள்ளி நிகழ்ச்சி முடிந்து விட்டது. அதற்காக, வைக்கப்பட்ட அலங்கார வளைவுகளை இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர். இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அகற்றுமா?
-பாபுராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.