வாலாஜா ஒத்தவாடை தெரு பின்பக்கம் விஜயநகர் பகுதியில் பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை, கழிவு நீர் கால்வாய், குடிநீர் இணைப்பு ஆகியவை வழங்கப்படவில்லை. மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரபு, வாலாஜா.