வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 ஆவின் கடை அருகே மாநகராட்சி மண்டல அலுவலகம் செல்லும் வழியில் அமரர் ஊர்தி பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் பெண்கள் அமரர் ஊர்தியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அமரர் ஊர்தியை வேறு இடத்தில் நிறுத்தவும், அங்குள்ள மின் விளக்குகளை எரியவிடவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-செந்தில், வேலூர்.