காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே வேலூர் நோக்கி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் மழை, வெயில் காலங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் காத்திருக்கிறார்கள். மக்கள் நலன் கருதி காவேரிப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்து தரவேண்டும்.
-எம்.மோகன், காவேரிப்பாக்கம்.